Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூ.100 கோடி சன்மானம்: ஆந்திர முதல்வர் அதிரடி!!


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:09 IST)
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வென்றால் தலா ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 

 
 
திருப்பதியில் சிறுவர்கள் அறிவியல் மாநாட்டை சந்திரபாபு நாயுடு  தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், விளையாட்டையும், விளையாட்டு வீரர், வீராங்கனைகளையும் ஊக்குவிப்பது போல் அறிவியல் துறையில் சாதனை நிகழ்த்துபவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
 
பல திறமைசாலிகள் இருந்தும் நோபல் பரிசு வாங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. எனவே ஆந்திராவில் இருந்து நோபல் பரிசு வாங்கும் விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும் என தெரிவித்தார்.
 


இதில் மேலும் படிக்கவும் :