1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2019 (22:57 IST)

என்ன நடந்தாலும் பின்வாங்க முடியாது: அமித்ஷா உறுதி

கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்த நிலையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் போராடி வருகின்றனர் 

இந்த நிலையில் அமித்ஷா இந்த சட்டம் குறித்து கூறிய போது ’எத்தனை போராட்டம் நடந்தாலும் என்ன நடந்தாலும் இந்த குடியுரிமை சட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார்
 
மேலும் மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புவது என்னவெனில் ’இந்தியாவில் உள்ள யாருக்கும் குடியுரிமை போகாது என்றும் இந்த சட்டம் குறித்த முழு விளக்கமும் அரசின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என்றும் அதை படித்துப் பார்த்தாலே உங்களுக்கு தெரிந்துவிடும் என்றும் ஆனால் காங்கிரஸ் கட்சி மக்களை மடையர்களாக்கி உள்ளது என்றும் குறிப்பிட்டார் 
 
மேலும் இந்த சட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்தார். அமித்ஷாவின் இந்த உறுதியால் குடியிருப்பு சட்டம் ரத்து செய்யப்படாது என்றே கருதப்படுகிறது