வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 31 மார்ச் 2016 (11:23 IST)

அடுத்த ஜனாதிபதி ஆகிறாரா அமிதாப்பச்சன்? : மோடி பரிந்துரை

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக அமிதாப்பச்சனை பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது, அமிதாப்பச்சன் நடித்த  ‘பா’ படவிழாவில் கலந்து கொண்டார். அப்போதுதான் மோடிக்கு அமிதாப்பச்சன் அறிமுகமானார். அந்த படவிழாவில் பேசிய மோடி, குஜராத் தூதுவராக அமிதாப்பச்சன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
தற்போது அவரையே அடுத்த ஜனாதிபதியாக நியமிக்க மோடி பரிந்துரை செய்ய இருப்பதாக சமஜ்வாடி தலைவர்களில் ஒருவரான அமர்சிங் கூறியுள்ளார்.
 
அமிதாப்பச்சன் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படலாம் என நடிகர் சத்ருகன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.