1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 27 நவம்பர் 2015 (12:09 IST)

அமீர் கானை நாட்டை விட்டு வெளியேறுமாறு யாரும் சொல்ல முடியாது: மம்தா பானர்ஜி

நடிகர் அமீர் கானை இந்தியாவை விட்டு வெளியே செல்லுமாறு யாரும் சொல்ல முடியாது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


 

 
நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மை குறித்து நடிகர் அமீர் கான் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அமீர் கானின் கருத்துக்கு ஆதரவுபும் எதிர்ப்பும் பெருகிக் கொண்டே உள்ளது.
 
அரசியல் தரப்பில் மட்டுமல்லாது திரைத்துறையினரும் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில், அமீர் கானுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், "ஜனநாயக நாட்டில்தான் உணர்ந்ததை கூற ஒருவருக்கு உரிமை உண்டு. அமீர் கான், தான் என்ன உணர்ந்தாரோ, அவர் மனைவி என்ன சொன்னாரோ அதை தான் கூறியுள்ளார்.
 
அமீர்கானை இந்தியாவை விட்டு வெளியேறுங்கள், வெளிநாட்டிற்குச் செல்லுங்கள், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.
 
நாம் எல்லோரும் இந்திய நாட்டின் குடிமக்கள். இந்த நாடு ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இது நமது தாய்நாடு." என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.