Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹோட்டலில் வைத்து சீரழிக்கப்பட்ட 25 வயது பள்ளி ஆசிரியை!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 26 டிசம்பர் 2016 (17:27 IST)
சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். ஆனால் இன்னும் தனக்கான நீதி கிடைக்க வேண்டும் என அப்பெண் போராடி வருகிறார்.

 
 
அமெரிக்காவை சேர்ந்த 25 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருந்தார். அங்கு தான் அந்த விபரீதம் நடைப்பெற்றது.
 
ஹோட்டலில் வேலை பார்த்த ஹோட்டல் ஊழியர்கள் சிலர், அப்பெண்ணுக்கு வலுகட்டாயமாக போதை மருந்துகளை கொடுத்து இரண்டு நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த அமெரிக்க தொண்டு நிறுவனம் மூலம் புகார் அளித்துள்ளார். பின்னர் NGO மூலம் இந்திய போலிசாரிடம் புகார் அளித்துள்ளார். 
 
டெல்லி போலிசார் இந்த வழக்கு சம்மந்தமாக இதுவரை 11 பேரிடம் விசாரணை நடத்தினாலும், யாரையும் இன்னும் கைது செய்யவில்லை. மேலும், இந்த வருடம் மட்டும் டெல்லி மாநிலத்தில் 1900 கற்பழிப்பு புகார்கள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :