1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 26 மே 2018 (13:09 IST)

அலகாபாத் நகரின் பெயர் மாற்றம்: இனி பிரயாக் ராஜ் நகரம்

இந்துக்களின் புனித தலம் மற்றும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் இணையும் நகரம் என்ற பெருமையை பெற்ற அலகாபாத் நகரம் விரைவில் 'பிரயாக்ராஜ் என்று மாற்றப்படவுள்ளது.
 
இந்த நகரம் பழங்காலத்தில் பிரயாக் என்றுதான் அழைக்கப்பட்டது. ஆனால் அக்பர் காலத்தில் இந்த நகரம் இலாஹாபாத் என்றும், பின்னர் ஷாஜஹான் காலத்தில் 'அலகாபாத்' என்றும் மாற்றப்பட்டதாக சரித்திரம் கூறுகின்றது
 
இந்த நிலையில் இந்த நகரத்தை மீண்டும் பழைய பெயரில் அதாவது பிரயாக் ராஜ்' என்ற பெயரை மாற்றவுள்ளதாக அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர்  கேசவ் பிரசாத் மௌர்யா அறிவித்துள்ளார். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அர்த்த கும்பமேளா திருவிழா இந்த நகரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அந்த சமயத்தில் 'பிரக்யாராஜ்' என்ற பெயரிலேயே அழைப்பிதழ் அச்சடிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.