வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (15:17 IST)

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே ஆல் பாஸ் - மத்திய அரசு அதிரடி

இனிமேல் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி என்கிற புதிய நடைமுறை அமுலுக்கு வருகிறது.


 

 
இதற்கு முன் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்கிற நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதனால்  மாணவர்களிடையே கல்வியின் தரம் குறைந்து வருகிறது என மனிதவள மேம்பாட்டுத்துறை கூறி வந்தது.
 
எனவே, அதில் மாற்றம் செய்வதற்காக முயற்சியை மனதவள மேம்பாட்டுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக உருவாக்கப்பட்ட பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
 
சமீபத்தில் டெல்லியில் மாநில கல்வி அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்திலும் ஆல் பாஸ் திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. 
 
எனவே இனிமேல் 5ம் வகுப்புக்கு மேல் கட்டாய தேர்ச்சி எதுவும் கிடையாது. அதற்கு அடுத்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், துணை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டு. அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் ஒருவருடம் அதே வகுப்பில் படிகக் வேண்டும் என்ற அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.