Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஏப்ரல் 1 முதல் மதுவிலக்கு: ம.பி. முதல்வர் அதிரடி அறிவிப்பு


sivalingam| Last Modified திங்கள், 20 மார்ச் 2017 (04:40 IST)
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக நல ஆர்வலர்களும், அரசியக் கட்சிகளும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில் ஆளும் கட்சிகள் வருமானத்தை கணக்கில் கொண்டு செவிசாய்க்க மறுத்து வருகின்றன.

 
இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மதுவிலக்கை தனது மாநிலத்தில் அமல்படுத்தியதோடு, மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் செய்தார்.

இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்த இருப்பதாக  அம்மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

நேற்று  நர்மதா ஆற்றின் கரையில் நர்மதா சேவா யாத்ரா என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘மகா ஆரத்தி’ நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் பேசியதாவது: ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மத்தியப் பிரதேசத்தில் மதுவிலக்கு நடைமுறைக்கு வரும். முதல்கட்டமாக நர்மதா ஆற்றின் கரையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என்று அதிரடியக அறிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :