வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : சனி, 3 அக்டோபர் 2015 (14:08 IST)

ஏர்டெல்லின் 4ஜி சேலஞ்ச் விளம்பரத்தை ஒளிபரப்ப தடை

ஏர்டெல்லின் 4ஜி சேலஞ்ச் விளம்பரத்தை ஊடகங்களில் ஒளிபரப்பக் கூடாது என்று இந்திய விளம்பரங்களுக்கான தரக்கட்டுப்பாட்டுக் கழகம் (ஏஎஸ்சிஐ) அறிவுறுத்தியுள்ளது.


 


ஏர்டெல்லின் 4ஜி சேவையை விட மிக விரைவான இன்டர்நெட் சேவையை வைத்திருந்தால், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதற்குமான போன் கனெக்சன் இலவசமாக வழங்கப்படும் என்பது போன்ற விளம்பரம், மக்களை ஏமாற்றும் செயல் என்று இந்திய விளம்பரங்களுக்கான தரக்கட்டுப்பாட்டுக் கழகம் (ஏஎஸ்சிஐ) தெரிவித்துள்ளது. எனவே ஏர்டெல்லின் 4ஜி சேவை விளம்பரத்தை ஒளிபரப்பக் கூடாது என்று ஏஎஸ்சிஐ  ஊடகங்களுக்கு தடைவிதித்துள்ளது.
 
மேலும், அக்டோபர் 7ம் தேதிக்கு மேல் அந்த விளம்பரத்தை ஒளிபரப்பவோ, பத்திரிகைகளில் வெளியிடவோக் கூடாது என்று ஏஎஸ்சிஐ அறிவுறுத்தியுள்ளது.