வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 31 ஜனவரி 2015 (16:28 IST)

துப்பாக்கி குண்டுகளைவிட வேகமாகச் செல்லும் அக்னி- 5 ஏவுகணை: வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது

ஒரிசா கடற்கரையிலுள்ள வீலர் தீவில், இந்தியாவின் அதி நவீன அக்னி- 5 அணு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.


 
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி- 5  ஏவுகணை ஒருடன்னுக்கும் அதிகமான எடை கொண்ட அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தாக்கும் திறன் கொண்டது.
 
ஒரிசா கடற்கரையில் வீலர் தீவில் காலை 8.06 மணிக்கு நடத்தப்பட்ட இந்த சோதனையில், ஏவுகணைனின் மூன்று பிரிவுகளும் துல்லியமாக செயல்பட்டு இலக்கை அடைந்ததாக திட்ட இயக்குனர் எம்விகேவி பிரசாத் தெரிவித்துள்ளார்.
 
17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏவுகணை ஐம்பது டன் எடை கொண்டது. இந்தியாவில் எந்த இடத்தில் இருந்தும் இந்த ஏவுகணையை ஏவ முடியும். துப்பாக்கி குண்டுகளின் வேகத்தை விட அதிக வேகத்தில் பாய்ந்து செல்லும் இந்த ஏவுகணையை பிரதமரின் நேரடி உத்தரவின் பேரில் மட்டுமே ஏவு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில். அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து, டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அக்னி- 5 ஏவுகணை நமது ராணுவத்தின் பெரும் சொத்து. இதன் வெற்றிக்காக பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் நான் சல்யூட் செய்கிறேன்“ என்று கூறியுள்ளார்.