1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 22 டிசம்பர் 2014 (13:55 IST)

மீண்டும் கூட்டணி அரசு அமைய வாய்ப்புள்ளது: அத்வானி கருத்து

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அரசில் மீண்டும் கூட்டணி அரசியல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
 
தொலைக்காட்சி ஒன்றுக்கு அத்வானி பேட்டி அளித்தார். அப்போது, நம் நாட்டில் கூட்டணி சகாப்தம் முடிந்து விட்டதாகக் கருதுகிறீர்களா? என்று செய்தியாளர் கேட்டார்.
 
அதற்கு அத்வானி கூறியதாவது:-
 
நான் அவ்வாறு கூறமாட்டேன். இந்தியா போன்ற மாறுபட்ட தன்மைகள் கொண்ட நாட்டில் மீண்டும் கூட்டணி அரசு அமைய வாய்ப்புள்ளது. இந்தியா போன்றதொரு நாட்டில் ஒருவர் அனைத்துச் சூழ்நிலைகளையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.
 
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஒரு கட்சி அரசு இருந்தது. எனினும் அந்த நிலை நீடிக்கவில்லை. வாஜ்பாய் அரசு கூட தனியொரு கட்சி தலைமையிலான அரசு அல்ல என்று அத்வானி கூறினார்.
 
மேலும், "வாஜ்பாய் போன்ற தேசபக்தருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டால் அது மிகவும் பொருத்தமாக இருக்கும்“ என்று அத்வானி கூறியுள்ளார்.
 
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் பெரும்பான்மை அரசு நடைபெற்று வரும் நிலையில் அத்வானியின் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.