Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திரிபுராவை அடுத்து நாகலாந்திலும் பாஜக கூட்டணி ஆட்சி

Last Modified சனி, 3 மார்ச் 2018 (14:31 IST)
திரிபுரா மாநிலத்தில் 20 ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில் இன்னொரு
வடகிழக்கு மாநிலமான நாகலாந்திலும் பாஜகவின் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.

மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளிலும் NDPP கட்சி 40 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜகவின் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கூட்டணி முன்னிலை வகித்து வந்தது.

சற்றுமுன் வெளியான தகவலின்படி இந்த கூட்டணி 30 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட NPF கூட்டணிக்கு 25 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த 2013 தேர்தலில் 38 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றிய இந்த கூட்டணி தற்போது ஆட்சியை பரிதாபமாக பறிகொடுத்துவிட்டது.

மேலும் நாகலாந்து மாநிலத்திலும் காங்கிரஸின் பரிதாபம் தொடர்கிறது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. கடந்த 2013ஆம் ஆண்டுதேர்தலில் இக்கட்சிக்கு 8 தொகுதிகள் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :