சோனியாவை அடுத்து ராகுல்காந்தியும் அமெரிக்காவுக்கு திடீர் பயணம்


sivalingam| Last Modified வெள்ளி, 17 மார்ச் 2017 (05:33 IST)
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அவருக்கு அமெரிக்க மருத்துவர்கள் வழக்கமான சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படும் நிலையில் நேற்று திடீரென அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவருமான ராகுல் காந்தியும் அமெரிக்கா சென்றுள்ளார்.


 


இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியபோது அமெரிக்கா சென்றுள்ள சோனியா காந்தியை, மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக, ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளதாகவும், இருவரும் இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார்கள் என்றும் கூறினர்.

மேலும்  சோனியா காந்தி தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளார் என்றும், அவர் நாடு திரும்பியதும் கட்சியில் ஒருசில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிட்தனர்.


 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :