1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (12:49 IST)

அட்ரா சக்க… நம்ம தளபதி சொன்னா சொன்னதுதான்…

இந்திய ராணுவத்தினர் கடந்த இரு ஆண்டுகளுக்கு  முன்பு செப்டம்பர் மாதத்தில் நம் நாட்டின் எல்லையைக் கடந்து சென்று  தீவிரவாதிகளின் முகாம்களின் மீது அதிரடியான  தாக்குதல் நடத்தியதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.


இந்த தாக்குதலுக்கு சர்ஜிக்கல் தாக்குதல் என பெயரிட்டு அழைத்தனர். இது நம் நாட்டு ராணுவத்தினரின் முக்கிய வீர தீரமான நிகழ்ச்சியாகவும் கருதப்பட்டு பலதரப்பினராலும் பாராட்டப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு அதன் நினைவு தினம் மத்திய அரசால் அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில் நம் ராணுவ தளபதி விபின்ராவத் கூறியுள்ளதாவது:

’எல்லைப்பகுதியில் பாகிஸ்தானால் சண்டை நிறுத்தத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகு பயங்கரவாதிகள் அதிகரித்து காஷ்மீர் பகுதியில் நிலவும் அமைதியை கெடுக்க சதி திட்டம் தீட்டிவருகின்றனர்.

இதுபோல் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் நுழைந்து அமைதிக்கு தீங்கு விளைவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது’  இவ்வாறு அவர் தெரிவித்தார்.