வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 26 ஏப்ரல் 2015 (11:13 IST)

செம்மரம் கடத்தல் வழக்கு: தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் கைது

செம்மரகடத்தலில் ஈடுபட்டுவந்த, ஆந்திராவைச் சேர்ந்த மஸ்தான் வலி என்பவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் கைது செய்யப்பட்டார்.


 

 
செம்மரகடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திராவைச் சேர்ந்த மஸ்தான் வலி மற்றும் அவரது சகோதரர் பாபாவலி ஆகியோர் சமீபத்தில் காவல்துயினரால் கைது செய்யப்பட்டனர்.
 
கைது செய்யப்பட்ட மஸ்தான் வலியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செம்மர கடத்தல் கும்பலுடன் நடிகை நீத்து அகர்வாலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது.
 
இதைத் தொடர்ந்து, செம்மர கடத்தல் தொடர்பாக இவர்கள் 3 பேர் மீதும் கர்னூல் மாவட்டம் ருத்ராவரம் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 
 
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நீத்து அகர்வாலின் வங்கி கணக்கில் இருந்து பல கடத்தல்காரர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
 
இதைத் தொடர்ந்து, நீத்து அகர்வாலின் வங்கி கணக்குகளை காவல்துறையினர் முடக்கினர். மஸ்தான் வலி கைது செய்யப்பட்டதை அறிந்ததும் நீத்து அகர்வால் தலைமறைவானார். இந்நிலையில் இன்று அவர் ஆந்திர  காவல்துறையினர்ரால் கைது செய்யப்பட்டார். 
 
திருப்பதி வனப் பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி கூலித்தொழிலாளர்கள் 20 பேரை அம்மாநில காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.