வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 13 பிப்ரவரி 2016 (09:23 IST)

நடிகை லிசிக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படுமா? நிதிமன்றம் நோட்டீஸ்

நடிகை லிசிக்கு நான்தான் தந்தை என்றும் இதை டிஎன்ஏ பரிசோதனை நடத்தி இதனை நிரூபிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தவருக்கு விளக்கம் அளிக்கும் படி லிசிக்கு நோட்டீசு அனுப்ப கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


 

 
மம்முட்டி, மோகன்லால் முதலிய முன்னணி களுடன் நடித்து மலையாள பட உலகில் 1980 களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் லிசி.
 
தமிழில் கமல்ஹாசனுக்குச் ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இவரும் மலையாள இயக்குநர் பிரியதர்ஷனும் 1990 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
 
இவர்களுக்கு ஒருமகனும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
 
இந்நிலையில், கேரள மாநிலம் முவாற்றுபுழாவைச் சேர்ந்த வர்க்கி என்பவர், நான் லிசியின் தந்தை என்று பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார்.
 
மேலும், வயதான காலத்தில் லிசி தன்னை கவனிக்காமல் விட்டுவிட்டார் என்றும் மாதம்தோறும் அவர் தனக்கு பண உதவி செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் மனு கொடுத்தார்.
 
இந்த மனுவின் அடிப்படையில் வர்க்கிக்கு மாதந்தோறும் லிசி ரூ.5,500 கொடுக்க ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். இதனை லிசி ஏற்கவில்லை.
 
வர்க்கி தனது தந்தை இல்லை என்று அவர் கூறினார். ஆர்.டி.ஓ. உத்தரவை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
ஆனால் நீதிமன்றம் வர்க்கிக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்தி உத்தரவிட்டது.
 
இதனை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் லிசி மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில் வர்க்கிக்கு லிசி மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
 
ஆனால் லிசி இதனை ஏற்கவில்லை. வர்க்கி தனது தந்தையே இல்லை என்று மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
 
இதைத் தொடர்ந்து வர்க்கி கேரள உயர் நீதிமன்றம் லிசி தனது மகள்தான் என்றும் இதனை ஏற்க அவர் மறுப்பதால் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார்.
 
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி இதற்கு லிசி விளக்கம் அளிக்கும்படி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
 
மேலும், இந்த வழக்கு விசாரணை வருகிற 19 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்படுமா? என்பது அப்போதுதான் தெரியவரும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.