Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலைக்கு காரணம் இதுதான்...

Last Modified: வியாழன், 16 மார்ச் 2017 (08:59 IST)

Widgets Magazine

நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின்கபூர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.


 

 
நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'பாண்டியன்' திரைப்படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்தவர் ஜெயசுதா. மேலும், அவர் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குணசித்திர நடிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது கணவரும் பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் சகோதருமான நிதின்கபூர் நேற்று முண்டினம் இரவு தற்கொலை செய்து கொண்டார்.
 
1995ஆம் ஆண்டு ஜெயசுதா-நிதின்கபூர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஷ்ரேயன், நிஹர் என்ற இருமகன்கள் உள்ளனர். பிரபல தயாரிப்பாளரான நிதின்கபூர் சமீபத்தில் தனது மகன் ஷ்ரேயன் நடித்த ஒரு படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் படுதோல்வி அடைந்தது.
 
இந்த படம் உள்பட அவர் தயாரித்த வேறுசில படங்களும் தோல்வியை தழுவியதால் கடும் நிதி நெருக்கடி காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்து வந்தார். மும்பை அந்தேரி பகுதியில் உள்ள தனது சகோதரை வீட்டில் அவர் வசித்து வருகிறார். 
 
இந்நிலையில், சம்பவத்தன்று கடும் மன உளைச்சலில் இருந்த அவர், அவர் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு சென்றள்ளார். மாடிக்கதவு பூட்டியிருந்ததால், பூட்டை உடைத்து சென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இரட்டை இலை யாருக்கு? தேர்தல் கமிஷனரை சந்திக்கின்றார் தம்பித்துரை

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக சசிகலா, அதிமுக ஓபிஎஸ் என இரண்டாக பிரிந்ததால் வரும் ...

news

ஹெட்போன் வெடித்து இளம்பெண்ணின் முகம் சேதம்! விமான பயணத்தில் விபரீதம்

ஹெட்பொனில் பாடல் கேட்டுக்கொண்டே விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் அந்த ...

news

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! திமுக அதிரடியால் பட்ஜெட் பாதிக்குமா?

தமிழக சட்டமன்ற சபாநாயகர் மீது இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக முடிவு ...

news

ஆர்கேநகர் தொகுதிக்கு தனித் தேர்தல் அறிக்கை: தினகரன் திட்டம்

சென்னை ஆர்.கே.நகரில் சசிகலா ஆதரவு அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டிடிவி தினகரன், ...

Widgets Magazine Widgets Magazine