செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 28 அக்டோபர் 2016 (16:52 IST)

மோடியை சந்தித்த கவுதமி

நடிகை கவுதமி, புற்றிநோயை குறித்த விழிப்புணப்பு இயக்கம் ஒன்றை ஆரமித்து நடத்தி வருகிறார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார்.


 


 
நடிகை கவுதமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்று வாழ்ந்து வருகிறார். இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார்.
 
'Life Again' என்ற பெயரில் இந்தியா முழுவதும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து கவுதமி, மோடியை சந்தித்து பேசினார்.
 
மோடியுடன் சந்திப்பு பற்றி கவுதமி கூறியதாவது:-
 
சுமார் அரை மணி நேரம் எனக்காக ஒதுக்கி என்னுடன் சிறப்பான முறையில் பேசினார். என் விழிப்புணர்வு இயக்கத்தின் நோக்கம் குறித்து விவரித்தேன். அதற்கு நல்ல ஆலோசனைகள் கூறினார்.
 
2017ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தினத்தில் நிகழ்வு நடத்த அவரது ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறோம். உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் நமது பழமையான, பாரம்பரியமான யோகாவை புகழ் பெற செய்ய வேண்டும்.
 
மேலும் தற்போது இந்த இயக்கம் மூலம், கல்வி, அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடங்கி உள்ளோம். 
 
இவ்வாறு தனது இயக்கம் பற்றியும், மோடியுடனான சந்திப்பு பற்றியும் கூறினார்.