அசிங்கமாக பேசிய நடிகை ஊர்வசி: டிவி நிகழ்ச்சியில் பரபரப்பு!

அசிங்கமாக பேசிய நடிகை ஊர்வசி: டிவி நிகழ்ச்சியில் பரபரப்பு!


Caston| Last Modified வெள்ளி, 18 நவம்பர் 2016 (09:50 IST)
நடிகை ஊர்வசி மலையாள தொலைக்காட்சி ஒன்றில் ஜீவிதம் சாட்சி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஒரு குடும்பத்தினரை மிகவும் அசிங்கமாக தரக்குறைவாக பேசியதாக ஊர்வசி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 
 
இது தொடர்பாக அம்மாநில மனித உரிமை ஆணையத்துக்கு புகார் சென்றதை அடுத்து இதனை கையிலெடுத்து அந்த தொலைக்காட்சி சேனலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
அந்த நிகழ்ச்சிக்கு நடிகை ஊர்வசி குடித்து விட்டு வந்ததாகவும், குடும்ப பிரச்சனை தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கும்போது அந்த ஆண் நபரிடம் நாகரீகமற்ற முறையில் பேசியதாகவும் இது இந்திய நீதித்துறை அமைப்பையே அவமதிப்பது போல உள்ளது.
 
ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எப்படி குடித்துவிட்டு வரலாம், பின்னர் எப்படி தரக்குறைவான வார்த்தைகளை உபயோகிக்கலாம். அடுத்தவர்கள் பிரச்சனையில் எப்படி தலையிடலாம் என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :