வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 27 ஜனவரி 2015 (11:11 IST)

அமிதாப் பச்சன் தகுதிக்கு ‘பாரத ரத்னா’ விருதுதான் ஏற்றது - மம்தா பானர்ஜி

நடிகர் அமிதாப் பச்சனுக்கு பத்ம விபூஷண் விருது போதாது, அவரது தகுதிக்கு ‘பாரத ரத்னா’ விருதுதான் ஏற்றது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
 
அமிதாப் பச்சனுக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான ‘பத்ம விபூஷண்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அது குறித்து மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ்கட்சசித் தலைவருமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:–
 
அமிதாப் பச்சன், ஒரு ஜாம்பவான். அவருக்கு பத்ம விபூஷண் விருது போதாது. அவரது தகுதிக்கு ‘பாரத ரத்னா’ விருதுதான் ஏற்றது. அந்த விருதைத்தான் அவருக்கு வழங்கி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 
இந்நிலையில், தனக்கு பத்ம விபூஷண் விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதை, அமிதாப் பச்சன் வரவேற்றுள்ளார்.
 
இது குறித்து தனது வளைதள பக்கத்தில் அமிதாப் பச்சன் குறிப்பிட்டிருப்பதாவது:–
 
இந்திய அரசு எனக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி அழகு பார்த்துள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எனது நன்றியைக் கூற வார்த்தைகளே இல்லை. மக்களின் அளப்பெரிய உணர்வில் இருந்து நான், மகிழ்ச்சசியில் செய்வகறியாது திகைப்படைந்துள்ளேன். 
 
இந்த விருதுடன் சேர்த்து, எனது குடும்பத்துக்கு 7 பத்ம விருதுகள் கிடைத்துள்ளன. என் தந்தை பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய விருதுகளும், நான் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளும், ஜெயா பச்சன் பத்ம ஸ்ரீயும், ஐஸ்வர்யாராய் பத்ம ஸ்ரீயும் பெற்றுள்ளோம்.
 
தேசிய அளவில் ஒரே குடும்பத்தில் இத்தனை விருதுகளை பெற்றிருப்பது நாங்கள்தான் (எங்கள் குடும்பம்தான்) என்று கருதுகிறோம். மக்களின் இந்த அன்புக்கும், பாசத்துக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம். இவ்வாறு அமிதாப்பச்சன் குறிப்பிடட்டுள்ளார்.