வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2015 (13:12 IST)

ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்த பெண் 12 ஆண்டுகளுக்கு பிறகு என்ஜினியருடன் காதல் திருமணம்

ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்த பெண் ஒருவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு என்ஜினியரைக் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
 

 
கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் நகரைச்சேர்ந்த கல்லூரி மாணவி சோனாலி முகர்ஜி (வயது 17). இவரது வீட்டிற்கு அருகே வசிப்பவர்கள்  பிரம்மதேவ், தபாஸ்மித்ரா, சஞ்சய் பஸ்வானுக்கு ஆகிய 3 இளைஞர்கள் தினமும் சோனாலியை கேலியும் கிண்டலும் செய்து வந்துள்ளனர். வெறுத்துப்பொன சோனாலி ஒருநாள் போலீசில் புகார் செய்வேன் என்று 3 இளைஞர்களையும் எச்சரித்துள்ளார்.
 
இதனால் கோபமடைந்த 3 இளைஞர்களும் "அழகாய் இருக்கிறோம் என்ற ஆணவத்தில்தானே எங்களை எடுத்தெறிந்து பேசுகிறாய், உன்னை என்ன செய்கிறோம் பார்'' என்று எச்சரித்தவர்கள், அன்று இரவு மொட்டை மாடியில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த சோனாலியின் முகத்தில், கப்பலின் இரும்புத் துருவை அகற்றுவதற்கு பயன்படும் பயங்கரமான ஆசிட்டை ஊற்றி விட்டனர். இதில் முகம் தலை மற்றும் மார்பு பகுதி அனைத்தும் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது, கண் பார்வையும் பறிபோனது.
 
நீண்ட கால சிகிச்சை கிட்டத்தட்ட 22 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன, ஆனாலும் இழந்த எதையுமே மீட்க முடியவில்லை. இனி வரும் வாழ்க்கையை ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்கால நலவாழ்விற்காக செலவழிக்க முடிவு செய்தார். இவருக்கு மும்பையைச் சேர்ந்த ஃபேட்டி என்ற தொண்டு நிறுவனம் உதவ முன்வந்தது, அந்த நிறுவனத்தின் மூலம்  ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களுக்கான மருத்துவம் மற்றும் புனர்வாழ்விற்காக நிதிதிரட்டி உதவி செய்தார்.
 
சோனாலி முகர்ஜி எலக்ட்ரிக்கல் என்ஜினியர் சித்ரஞ்சன் திவாரி என்பவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இவரகளது திருமணம் போகோரா மாவட்ட நீதிமன்றத்தில் வைத்து நடைபெற்றது.
 
இது குறித்து சோனாலி முகர்ஜி கூறியதாவது:-
 
”வாழ்க்கை முடிந்தது என நினைத்தேன். ஆனால் சித்தரஞ்சன் அந்த வாழ்க்கையை எனக்கு திரும்பி வழங்கியுள்ளார். அது மட்டுமில்லாமல் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் எனக்கு கொடுத்துள்ளார்.” என்று கூறினார்.