1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 26 ஜூன் 2017 (17:21 IST)

சபரிமலை தங்க கொடி மரத்தின் மீது ஆசிட் வீச்சு: 3 பேர் கைது!!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ரூ.3.20 கோடி செலவில் புதிய தங்கத்தாலான கொடி மரம் நிறுவப்பட்டது. இதன் மீது ஆசிட் வீசிய மூன்று பேரை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர்.


 
 
சபரிமலையில் புதியதாக தங்க கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 9,200 கிலோ தங்கம், தகடுகளாக மாற்றப்பட்டு கொடிமரத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் புதிய கொடி மர பிரதிஷ்டை நடைபெற்றதையடுத்து பக்தர்கள் புனித நீரை ஊற்றி வழிபட்டனர். 
 
இதன் பின்னர் பிற்பகல் 2 மணியளவில் பதிக்கப்பட்ட தங்க தகடுகள் வெண்மை நிறத்தில் மாற தொடங்கியது. பின்னர், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 
கோவில் பிரகாரத்தில் உள்ள சிசிடிவு கேமரா பதிவுகள் மூலம் மூன்று மர்ம நபர்கள் கொடி மரத்தின் மீது ஆசிட் ஊற்றியது தெரியவந்தது.
 
கேமராவில் பதிவான நபர்களின் புகைப்படங்களை வைத்து தேடுதல் வேட்டையில் போலீஸர் ஈடுபட்டனர். பின்னர் பம்பை பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டு இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.