வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2016 (16:44 IST)

பசு 80 சதவீதம் மனிதனை போன்றது: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பசு 80 சதவீதம் மனிதன் மரபணுக்களை கொண்டது என்று அமெரிக்க நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


 

 
பசு மாடுகள் 80 சதவீதம் மனிதர்கள் மரபணுக்களை கொண்டது என்று அமெரிக்க நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத சிக் கூறியுள்ளார்.
 
ஹிந்துவத்தில் தற்போது பசுவை போற்றி வழிபாடு செய்து கொண்டிருப்பதால் பாஜக அரசு மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டு இரைச்சிக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் ராஜ்நாத் சிங்கும் பசுக்களுக்கு முன்னுரிமை அளித்து பேசியுள்ளார்.
 
அதைத்தொடர்ந்து மாடு வதைக்கு எதிராக விதிக்கப்பட்ட பல சட்டங்கள் குறித்து வரலாற்றில் இருந்த ஆதாரங்களை அடுக்கடுக்காக எடுத்துரைத்தார்.
 
பகதூர் ஷா, பாபர் மற்றும் ஜகான்கீர் ஆகியோர் கலத்தில் வேத முறைப்படி, பசு வதை மற்றும் மாட்டு இறைச்சி தடை செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்தார். அதோடு பசுவதையை தவிர்க்கும் வரை யாராலும் ஹிந்துஸ்தானை ஆள முடியாது என்று பாபர்நாமாவில் எழுதப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.