1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 29 ஜூலை 2015 (02:25 IST)

அப்துல் கலாம் உடலை கேரளா கொண்டுவர வேண்டும்: உம்மன் சாண்டி கோரிக்கை

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடலுக்கு, கேரள மக்களும் மரியாதையும், அஞ்சலி செலுத்தும் வகையில், திருவனந்தபுரம் கொண்டு வரவேண்டும் என மத்திய அரசுக்கு, கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரணம் அடைந்ததை அடுத்து, அவரது உடல், டெல்லியில் வைக்கப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் உடலுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற முக்கியத் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
 
இந்நிலையில், கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, மத்திய அரசுக்கு திடீர் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், அப்துல் கலாம் 1960 ஆம்  ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை கேரளாவில், திருவனந்தபுரத்தில்தான் வாழ்ந்தார். எனவே, அவரது உடலை ராமேஸ்வரம் கொண்டு செல்லும் முன்பு, திருவனந்தபுரம் கொண்டு வந்தால், இங்குள்ள மக்களும் அவருக்கு மரியாதையும், அஞ்சலியும் செலுத்த வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.