வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 25 ஏப்ரல் 2015 (15:59 IST)

ஆசிவாங்கச் சென்ற மணப்பெண்ணை கற்பழித்த மடாதிபதி; திருமணம் செய்து பரிகாரம்

திருமணமான 3ஆவது நாளில் ஆசிர்வாதம் வாங்க சென்ற புது மணப்பெண்ணை 4 நாட்கள் சிறைவைத்து கற்பழித்த மடாதிபதியே திருமணம் செய்துள்ளார்.
 
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரா கிராமத்தை சேர்ந்த சங்கரம்மா என்பவருக்கும், கொப்பல் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
 
இந்நிலையில், திருமணம் முடிந்த 3ஆவது நாளில் சங்கரம்மா, தனது கணவருடன் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். பின்னர் அருகில் இருந்த மடத்திற்கு சென்று மடத்தில் இருந்த மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலியிடம் புதுமணத் தம்பதி ஆசிர்வாதம் வாங்க சென்றனர்.
 
அப்போது புது மணப்பெண்ணை அனுபவிக்க வேண்டும் மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலிக்கு என்று ஆசை ஏற்பட்டுள்ளது. அதன்படி மடாதிபதி, மணப்பெண்ணின் கணவரை, கடைக்கு சென்று பூஜைப் பொருட்களை வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
 
இதற்கிடையில் மடாதிபதி, மணப்பெண்ணிற்கு தெய்வீக சக்தி கிடைக்கும்படி செய்வதாகக் கூறி, சில வசிய வேலைகளை செய்துள்ளார். அதற்குள் கடைக்கு சென்றிருந்த கணவர், மடத்திற்கு திரும்பி வந்து பார்த்தபோது இருவரும் மாயமாகியுள்ளனர்.
 
மனைவி வீடு சென்றிருக்கலாம் என்று நினைத்து வீடு திரும்பிய கணவர், தனது மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் அவர், தனது மனைவியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலியிடமே முறையிட்டுள்ளார்.
 
அப்போது மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலி, கொப்பல் அருகே உள்ள கோவிலில் அவரது மனைவி இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து லதாவின் கணவர் அந்த கோவிலுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு அவர் மனைவி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதையடுத்து மனைவி, தன்னை மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலி கடத்திச் சென்று ஒரு தங்கும் விடுதியில் சிறை வைத்து 4 நாட்களாக கற்பழித்து விட்டார் என்று கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அவரது கணவர் அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
 
மேலும் இந்த சம்பவம் குறித்து கொப்பல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரி புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், தன்னை மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலி என்பவர் தன்னை கற்பழித்து விட்டார். எனது கணவரும் என்னை கைவிட்டு விட்டார்.
 
எனவே, மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலியை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதைதொடர்ந்து கொப்பல் புறநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலியை வலைவீசி தேடி வந்தனர்.
 
இதையடுத்து சங்கரம்மாவின் உறவினர்களும், கிராம மக்களும் மடாதிபதி அனுமந்தப்பா மடத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி இரவு ஹனுமந்தப்பா தனது மடத்திற்கு வந்துள்ளார். இதை அறிந்த கிராம மக்கள் 100–க்கும் மேற்பட்டோர் உடனே மடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
 
இதனைக் கண்டதும் ஹனுமந்தப்பா அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இருப்பினும் அவரை கிராம மக்கள் மடக்கிப் பிடித்தனர். உடனே சிறிது நேரத்திலேயே ஹனுமந்தப்பாவையும், சங்கரம்மாவையும் மலை மல்லேஸ்வரா கோவிலுக்கு அழைத்து சென்றனர்.
 
அங்கு மடாதிபதி ஹனுமந்தப்பாவுடன் சங்கரம்மாவுக்கு கிராம மக்கள் மறுமணம் செய்து வைத்தனர். ‘ஒரு பெண்ணின் வாழ்க்கை கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக சங்கரம்மாவை திருமணம் செய்துள்ளேன்’ என்று மடாதிபதி கூறியுள்ளார்.