வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 5 ஜூலை 2015 (00:27 IST)

போலி கல்வி சான்றிதழ் புகாரில் சிக்கிய ஆம்ஆத்மி கட்சி பெண் எம்.எல்.ஏ.

ஆம்ஆத்மி கட்சி பெண் எம்.எல்.ஏ. பவனா கவுர் மீதான போலி கல்விச் சான்றிதழ் புகாரில் சிக்கியுள்ளார்.
 
போலி கல்வி சான்றிதழ் வழக்கில் டெல்லி சட்ட மந்திரி ஜிதேந்தர் சிங் தோமர்  பதவியை இழந்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஆம்ஆத்மி கட்சியின் பெண் எம்.எல்.ஏ வான பவனா கவுர் மீது போலி கல்வி சான்றிதழ் புகார் எழுந்து உள்ளது.
 
இது குறித்து, சமரேந்திரா நாத் வர்மா என்பவர் டெல்லி மெட்ரோ பாலிட்டன் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பவனா கவர் கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் போது வேட்புமனுவில் பிளஸ் 2 முடித்துள்ளதாக கல்வி சான்றிதழ் கொடுத்தார்.
 
ஆனால், 2015 ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் போது அவர் தனது வேட்புமனுவில் பி.ஏ மற்றும் பி.எட் படித்ததாக கூறியுள்ளார்.
 
பி.ஏ. படிக்க 3 ஆண்டுகளும், பி.எட் படிக்க 2 ஆண்டுகளும் என 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் அவர்  14 மாத காலத்திற்குள் 2 பட்டப்படிப்பு படித்தாக கூறி வேட்பு மனுவை தாக்கல் செய்து உள்ளார். இது மோசடியான செயல் ஆகும். எனவே,  ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பவனா கவர் மீது விசாரணை நடத்தி அவர் மீது உரிய நடவடிக்கை உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
 
இந்த புகாரில், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டநீதிமன்றம் வழக்கு விசாரணையை  ஜூலை25 ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிவிட்டது.