வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (14:31 IST)

டிஜிட்டல் பரிவர்த்தனையை எளிதாக்க ஆதார் பேமெண்ட் ஆப்

500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று மத்திய அரசு அதைத்தொடர்ந்து நாட்டு மக்கள் அனைவரும் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஆதார் பேமெண்ட் ஆப் வெளியாகிறது.


 

 
நாடு முழுவதும் மக்கள் அனைவர்ரும் டிஜிட்டல் முறையில் பணம் பரிவர்த்தனை செய்ய மத்திய பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. அதற்காக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுபவர்களுக்கு பலவேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
சேவை அவரி விலக்கு, பரிசு பொருட்கள், கட்டண சலுகை என பல்வேறு சலுகையை வழங்கி மக்களை டிஜிட்டல் முறைக்கு மாற்ற ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஆதார் பேமெண்ட ஆப் வெளியாகிறது.
 
ஏற்கனவே ஆதார் கார்டு மூலம் பணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆப் மூலம் பணம் செலுத்த, ஆதார் எண் பயன்டுத்தி, பணம் செலுத்த வேண்டிய வங்கியை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். பின் பயோமெட்ரிக் ஸ்கேன் மூலம் பண பரிமற்றம் செய்யப்படும். 
 
வங்கி கணக்குகளில் ஆதார் எண் இணைத்திருந்த வாடிக்கையாளர்கள் ஆதார் பேமெண்ட் செயலியின் சேவையை பயன்படுத்த முடியும். இந்தியாவில் இதுவரை மொத்தம் 40 கோடி ஆதார் எண்கள் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் மார்ச் 2017க்குள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.