1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2017 (12:26 IST)

வழக்கில் சிக்க வைத்த சசிகலா தரப்பு ; பழி தீர்க்க காத்திருக்கும் ஆச்சார்யா

சசிகலா தரப்பினர் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவத்தே ஆக வேண்டும் என்பதில் கர்நாடக அரசு வழக்கறிஞர் உறுதியாக இருப்பதற்கு சில பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.

 


 
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என கர்நாடக அரசு சார்பில் சிறப்பாக வாதாடி, நீதிபதி குன்ஹாவிடம் தண்டனை வாங்கி கொடுத்தவர் ஆச்சார்யா.  இதனால், அவர் ஜெ.வின் கோபத்திற்கு ஆளானார் எனக் கூறப்பட்டது. 
 
எனவே, ஜெயலலிதா மீண்டும் முதல்வரான பின், ஆச்சார்யாவிற்கு பல்வேறு வழியில் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  ஆச்சார்யா ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்ததாக அவர் மீது வழக்கு தொடர்ப்பட்டது. மேலும், பெங்களூரின் பல இடங்கல்ளில், அவர் மீது பழி சுமத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதன் காரணமாக, ஆச்சார்யா கடுமையான மன உளைச்சலுகு ஆளானார். மேலும்,  தன்னை நிரபராதி என நிரூபித்து, அந்த வழக்குகளில் இருந்து அவர் வெளியே வந்தார். அதையெல்லாம் இன்னும் அவர் மறந்துவிடவில்லையாம். 
 
எனவேதான், ஜெ உள்ளிட்ட 4 பேருக்கும் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. ஜெ. மரணம் அடைந்துவிட்டதால், சசிகலா உள்ளிட்ட மூவரும் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  
 
அதேபோல், சசிகலா உள்ளிட்ட மூவரையும் சென்னை புழல் சிறைக்கு மாற்றும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. அது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஆச்சார்யா “ இதுபோன்ற சலுகைகளை, தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு வழங்குவது சட்டப்படி குற்றமாகும். சிறையில் சொகுசாக வாழ்வது தண்டனை ஆகாது. சசிகலா மற்றும் இளவரசியை சென்னை சிறைக்கு மாற்ற முயற்சிகள் நடப்பதாக அறிந்தேன். அவர்கள் இஷ்டபடியெல்லாம் செயல்பட முடியாது. அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும். மேலும், அப்படி அவர்கள் மனு தாக்கல் செய்தால், அதற்கு ஆட்சேபனை தெரிவித்து கர்நாடக அரசு சார்பாக மனு தாக்கல் செய்வோம்” என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.