வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 30 மே 2017 (23:18 IST)

மேட்ரிமோனியல் இணையதளத்தால் வாழ்க்கையை பறிகொடுத்த சாப்ட்வேர் இளம்பெண்

பெரும்பாலான திருமணங்கள் தற்போது மேட்ரிமோனியல் இணையதளங்கள் மூலமே நடந்து வருகிறது. இதன்படி பெங்களூரை சேர்ந்த ஒரு சாப்ட்வேர் பணியில் இருக்கும் இளம்பெண் ஒருவர் தனக்கு தானே மாப்பிள்ளை தேடும் படலத்தில் இறங்கினார்.



 


ஒரு முன்னணி மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்த அவருக்கு அதே ஊரை சேர்ந்த சாப்ட்வேர் ஊழியர் சுபைன் என்பவர் பழக்கமானார். இருவரும் சிலநாட்கள் பேசி, பழகி பின்னர் லிவிங் டு கெதர் முறையில் வாழ்க்கையை நடத்தினர்.

இந்த நிலையில் திடீரென ஒருநாள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது பின்னர் கொலை முயற்சி வரை சென்றது. இளம்பெண்ணை தலையணையை வைத்து கொல்ல முயற்சி செய்துள்ளார் சுபைன். பின்னர் இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.