தனியார் பேருந்து கோர விபத்து - 17 பேர் பரிதாப பலி

up
Last Modified புதன், 13 ஜூன் 2018 (08:21 IST)
உத்திரபிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் மெயின்பூரி அருகே 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்த பயணிகள் மரணபயத்தில் அலறினர்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புத் துறையினர், இந்த கோர விபத்தில் காயமடைந்த 35க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த கோர விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :