வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (20:18 IST)

பெண்ணின் வாழ்க்கை பயணம்; கடத்தல், விற்பனை, திருமணம், விடுதலை

டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் 12 வயதில் கடத்தப்பட்டு, 15 வயதில் திருமணம் செய்யப்பட்டு, 9 இடங்களில் விற்பனை செய்யப்பட்டு, இறுதியில் 22 வயதில் விடுதலை ஆகி வீட்டை சென்றடைந்தார்.


 

 
டெல்லி, சீலம்பூர் குடியிருப்பு பகுதியில் இருந்து ஜூலை 2, 2006ஆம் ஆண்டு கடத்தப்பட்ட 12 வயது சிறுமி தற்போது 22 வயதில் வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்.
 
அவரது இந்த 10 வருட வாழ்க்கை பயணம் குறித்து அந்த பெண் கூறியதாவது:-
 
12 வயதில் நான் கடத்தப்பட்டபோது நான் சாம்பல் நிற பாவடையும், பிங்க் நிறத்தில் மேலாடையும் அணிந்திருந்தேன். வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று காரில் இரு குமபல் கடத்திச் சென்றனர்.
 
கடத்திச் சென்றவர்கள் என்னை ரூ.300க்கு விற்றனர். அங்கு என்னோடு 20 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். பகல் முழுதும் கடுமையான வேலை, இரவில் பலபேர் வந்து வரிசையாக வல்லுறவுகொள்வார்கள். ஒருவேளை மட்டுமே உணவு கொடுத்தனர். இப்படி 12 மாதங்கள் செய்து வேறொருவரிடம் விற்றனர்.
 
இப்படி 9 இடங்களின் மாறி மாறி விற்கப்பட்டேன். 15 வயது எட்டிய பிறகு என்னை பஞ்சாப் கிராமத்தில் ஒரு போதைப்பழக்கம் உள்ள ட்ரக் ஓட்டுனருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். அவனோடு எனக்கு 2 குழந்தைகள் பிறந்தது. அவன் 2011 ல் இறந்துவிட்டான். அவனுடைய குடும்பத்தை சேர்ந்த சில உறவினர்களும் கட்டாயப்படுத்தி என்னுடன் உறவுக் கொண்டனர்.
 
கணவனுடைய சகோதரி, என் 2 குழந்தைகளையும் என் அனுமதி இல்லாமல் பறித்துக்கொண்டு என்னை வீட்டைவிட்டு துரத்திவிட்டாள். பின்னர் சாப்பாட்டு வழியில்லாமல் பிச்சை எடுத்தேன், சாலையில் உறங்கினேன்.
 
அப்போது ஒருவர் எனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி மேற்கு வங்கத்திற்கு அழைத்து சென்று நடன விடுதியில் விற்றுவிட்டார். அங்கு டெல்லியை சேர்ந்த ஒரு பெண்ணை சந்தித்தேன். அவரிடம் என வாழ்க்கையில் நடந்த துன்பங்களை சொன்னேன். அவர்தான் என்னை டெல்லிக்கு அழைத்து வந்தார்.
 
இறுதியாக அக்கா வீட்டை அடையாளம் கண்டு முதலில் அவரைதான் சந்தித்தேன். இப்போது என குடும்பத்துடன் சேர்ந்துவிட்டேன் என்றார்.