லுங்கி கட்டிக்கொண்டு கல்லூரிக்கு வந்த மாணவிகள்: ஜீன்ஸ்க்கு தடை விதித்ததால் நூதன எதிர்ப்பு!


Caston| Last Modified செவ்வாய், 7 ஜூன் 2016 (14:45 IST)
கேரளாவில் கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஜீன்ஸ் அணிந்து வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதனை எதிர்த்து மாணவிகள் நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

 
 
ஜீன்ஸ் தற்போது பெண்கள், அதிலும் கல்லூரி மாணவிகளுக்கு தவிற்க முடியாத ஒரு ஆடையாக மாறிவிட்டது. இதற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்ததால் மாணவிகள் லுங்கி கட்டிக்கொண்டு வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
 
தாங்கள் லுங்கி கட்டிக்கொண்டு வந்து, அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த புகைப்படத்தை மாணவர்களும் அதிகமாக பரப்பி விட்டு அதனை தற்போது வைரலாக்கி உள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :