வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2016 (10:53 IST)

8 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-35

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 8 செயற்கைகோள்கள் உடைய பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 


 

 
இஸ்ரோ, சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் மூலம் 8 செயற்கைகோள்களை இன்று காலை விண்ணில் செலுத்தியது.
 
இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அகடமிக் நிறுவனங்களை சேர்ந்த 2 செயற்கைகோள்கள், அல்ஜீரியா, கனடா, அமெரிக்க நாட்டை சேர்ந்த செயற்கைகோள்களும் இவற்றில் அடங்கும்.
 
கடல் மற்றும் வானிலையை துல்லியமாக கண்டறிய இந்த செயற்கைகோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த செயற்கைகோள்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.