வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 16 ஜனவரி 2016 (12:00 IST)

சிறார்களுக்கு போதைப் பொருட்கள் விற்றால் 7 ஆண்டு சிறை: அமலுக்கு வந்தது புதிய சட்டம்

கடந்த குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட சிறார் நீதிச்சட்ட திருத்த மசோத-2015 க்கு குடியரசுத்தலைவர் பிரணப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததை அடுத்து அந்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.


 
 
திருத்தப்பட்ட இந்த சட்டத்தின் படி சிறார்களுக்கு போதைப் பொருட்களான பீடி, சிகரெட், மதுபானம், பான்பராக், புகையிலை போன்றவற்றை விற்பனை செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லடசம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இந்த புதிய அரசாணையை குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
 
குழந்தைகளை பிச்சை எடுக்க பயன்படுத்துவதும் இந்த சட்டத்தில் தண்டனைக்குரிய குற்றமாகும், இவர்களுக்கு இந்த தண்டனையும், அபராதமும் பொருந்தும்.
 
மேலும் இந்த சட்டத்தில், பாலியல் பலாத்கார கொடூர செயலில் ஈடுபடும் 16 முதல் 18 வயதுள்ளவர்கள் சிறார்களாக கருதப்படமாட்டாது. அவர்களை பெரியவர்களாக கருதி கடும் தண்டனை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
 
ஐ.நா வின் குழந்தைகள் உரிமை மாநாட்டு தீர்மானத்தில் 18 வயதிற்கு உட்பட்ட அனைவரையும் சிறாராக கருத வேண்டும் என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவின் புதிய சட்டம் கொடுங்குற்றம் புரியும் சிறார்களை பெரியவர்களாக கருத வகை செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.