வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2018 (08:03 IST)

டீ, ஸ்நாக்சிற்காக 68 லட்சம் செலவழித்திருக்கும் பா.ஜ.க அமைச்சர்கள்

பா.ஜ.க தலைமிமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் உத்தரகாண்டில், டீ, ஸ்நாக்சிற்காக மட்டும் 68 லட்சம் செலவாகி இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி(சரக்கு மற்றும் சேவை வரி), மத்திய பட்ஜெட் ஆகியவற்றால் நடுத்தர மக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். தாங்கள் சம்பாதிக்கும் தொகையில், பெரும்பாலானவற்றை அரசிற்கு வரியாக செலுத்துகின்றனர். இதனால் மாதாமாதம் தங்கள் குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்ய கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில் மக்கள் கஷ்டப்பட்டு கட்டும் வரித் தொகையில், உத்தராகாண்ட் மாநில பாஜக முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்,  பதவியேற்ற ஒன்பது மாதங்களில் டீ மற்றும் ஸ்நாக்ஸ் வகையறாக்களுக்கு மட்டும் 68 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.