வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 17 பிப்ரவரி 2015 (18:29 IST)

தாய்ப்பால் கொடுக்க அனுமதிக்காததால் 6 மாத பச்சிளம் குழந்தை மரணம்

தெலுங்கானாவில் பசியால் துடித்த 6 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அனுமதிக்காததால் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தெலுங்கானா மாநிலத்தின் மெஹபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், அங்குள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்து வந்துள்ளார். மேலும் அந்த பெண் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் அமைத்து தரப்பட்டுள்ள தகரக் கொட்டகையில் வசித்து வந்துள்ளார். 
 
இந்நிலையில், அந்தப் பெண் வேலை செய்து கொண்டிருந்தபோது, தகர கொட்டகைக்குள் குழந்தை பசியால் அழுதுள்ளது. இதனால், குழந்தைக்கு பாலூட்டுவதற்காக அந்த பெண்மனி புறப்பட்டுள்ளார். அப்போது, அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த பொறியாளர் அந்தப் பெண்ணை போக விடாமல் தடுத்துள்ளார்.
 
அந்த பெண்மனி பாலூட்டிவிட்டு சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக கூறியுள்ளார். ஆனாலும் அவர், அந்த பெண் குழந்தை பசி அமர்த்துவதற்கு அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் அந்த பச்சிளம் குழந்தை சிறிது நேரத்தில் பசியால் இறந்துள்ளது. 
 
இந்த சம்பவம் நடைபெற்று 10 நாட்கள் கடந்த நிலையில் இந்த கொடூர சம்பவம் தற்போது வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. தற்போது இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.