செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 14 நவம்பர் 2016 (16:06 IST)

பிரதமரின் 500, 1000 ரூபாய் செல்லாதென அறிவிப்புக்குப் பின் உள்ள 5 காரணங்கள்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 08ஆம் தேதி இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


 

கருப்புப் பணத்தை ஒழிக்க, கள்ளநோட்டை முடக்க, பாகிஸ்தானின் கள்ளநோட்டை தடுக்க, தீவிரவாதிகளின் பணப் புழக்கத்தை முறியடிக்க மோடி நடத்திய தைரியமான பொருளாதார சர்ஜிக்கல் ஆப்ரேசன் என முதலாளிகள் வாய்வலிக்க ஊளையிடுகின்றன.

கருப்புப் பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்பதைக் கேட்டு மோடியும் அம்பானியும் சிரித்திருப்பார்கள்.

முதல் காரணம்:

எதார்த்த நிலைமையே வேறு. கார்ப்பரேட் முதலாளிகளின் வராக்கடன் 8 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. மோடி வந்த பிறகு மட்டும் 3 லட்சம் கோடி வராக்கடன் அதாவது முதலாளிகள் வங்கியை ஏமாற்றிய கடன்.

2-வது காரணம்:
தொழில் மந்தம், விவசாய உற்பத்தி வீழ்ச்சி, சர்வதேச தேக்கம், மக்களிடம் திணிக்கப்பட்ட நுகர்வு வெறியால் வங்கிகளில் சேமிப்புப் பணம் அதலபாதாளத்துக்கு போய்விட்டது.

எல்லோருக்கும் வங்கிக்கணக்கு, மானியத்தை வங்கி வழியே செலுத்துதல், என கரணமடித்துப் பார்த்தும் வங்கியில் சேமிப்பு கூடவில்லை. 50%வங்கிக் கணக்குகள் பயன்படுத்தாமல் மரத்துப்போய் கிடக்கிறது. சட்டியிலிருந்தால் தானே அகப்பையில் வரும். அதை உயர்த்த!

3வது காரணம்:
வரிக்கட்டுவோரின் எண்ணிக்கையை ஒரு 25 லட்சம் பேராக்க உடனே ஏதாவது செய்ய வேண்டும் அதற்காக!

4வது காரணம்:
மன்மோகன் ஆட்சியில் பொருளாதார நெருக்கடியால் ரூபாய் மதிப்பு குறைந்து 70.00₹ வரை போனது அதைத் தடுக்க பல வழிகளிலும் முயற்சித்தும் தோல்வியிலே முடிந்தது.

அதற்குப் பின்னர் வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் 18% வட்டி தருகிறோம் 10ஆண்டுக்குப் பிறகு அசலும் வட்டியுமாக திருப்பித் தருகிறோமென கவர்ச்சி வாக்குறுதி கொடுத்தார்கள். அதற்கு நல்ல பலன் கிடைத்தது சுமார் 2.5 லட்சம் கோடி NRIகளின் பணம் குவிந்தது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை 69இல் நிறுத்தியது. அதற்கான வட்டித் தொகையைச் சேர்ந்தால் 2016 டிசம்பர் 31ஆம் தேதியோடு மொத்தமாக 3 லட்சம் கோடி கொடுக்க வேண்டும்.

5-வது காரணம்:
ராணுவ வீரர்களுக்கான ஒன் ரேங்க் ஒன் பென்சன் திட்டப்படி எல்லோருக்கும் பென்சன் கொடுக்க 50000 கோடி ரூபாய் வேண்டும்.

இதையெல்லாம் சமாளிக்க மோடி தலைமையில் 6 மாதமாக நடத்திய சதித் திட்டம்தான் இந்த 500, 1000 ரூபாய் செல்லாதென அறிவிப்பு.

இது மோடியின் தைரியமான செயல் கிடையாது. 3 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து தளத்திலும் ஏற்பட்ட படுதோல்வியை மறைக்க கார்ப்பரேட் முதலாளி நாய்கள் மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க அவர்களது வரி ஏய்ப்பு, வங்கிக் கடன் ஏய்ப்பை ஈடுகட்ட நடுத்தர வர்க்கம், நடுத்தர முதலாளிகளிடம் நடத்தப்பட்ட வழிப்பறிதான் இந்த 500,1000 விவகாரம்.

கட்டுரையாளர்: புஷ்கின்