Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

5 பேர் கும்பல்; கூட்டு பலாத்காரம்; பால்கனியிலிருந்து குதித்து தப்பிய பெண் - வீடியோ!

Sasikala| Last Updated: செவ்வாய், 14 மார்ச் 2017 (15:13 IST)
தெற்கு டெல்லி முனிர்கா பகுதியில் கற்பழித்த கயவர்களிடமிருந்து 20 அடி உயர பால்கனியிலிருந்து பெண் ஒருவர் குதித்து  தப்பி சென்றார். கிழிந்த ஆடையுடன் சாலையில் நடந்து சென்ற அப்பெண்ணுக்கு பொது மக்கள் உதவாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தெற்கு டெல்லி முனிர்கா பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவர் வசித்து வந்தார்.  அந்தப் பெண்ணை அவரது ஆண் நண்பர் விகாஸ் தனது நண்பர்கள் கொடுக்கும் பார்ட்டிக்கு வருமாறு அழைத்து சென்று,  5  ஆண் நண்பர்களும் சேர்ந்து வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றியுள்ளனர். இதில் போதை தலைக்கு ஏறிய மயக்க  நிலையில் இருந்த அந்தப் பெண்ணை 5 பேரும் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
மயக்கம் தெளிந்து காலை 5.30 மணியளவில் அவர்களிடம் இருந்து தப்பித்து முதல் மாடியின் பால்கனியில் இருந்து அந்தப்  பெண் குதித்துள்ளார். இதில் கால்களில் காயமடைந்த அவர் அந்த வழியாக சென்றவர்களிடம் நடந்ததைக் கூறி ஒரு வண்டியில்  ஏறி செல்லும் காட்சி, அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 
 
இதையடுத்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லக்ஷயா,  விகாஸ் குமார், நவீன், ஸ்வரித், ப்ரதீக் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
 
இந்த சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவிவருகிறது....

 


நன்றி: THE TIMES OF INDIAஇதில் மேலும் படிக்கவும் :