கொச்சியில் 4 ஆவது அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்பட்டது..

Arun Prasath| Last Modified ஞாயிறு, 12 ஜனவரி 2020 (15:05 IST)
கேரளா மாநிலம் கொச்சியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட நான்காவது கட்டிடம் தற்போது இடிக்கப்பட்டது.

கேரள மாநிலம் கொச்சி பகுதிகளில் விதிகளை மீறி நீர் நிலைகளின் அருகில் கட்டப்பட்டதாக எழுந்த புகாரில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று ஹெச்டூஓ ஹோலி ஃபெய்த் என்ற அடுக்குமாடி குடியிருப்பும், ஆல்ஃபா செரின் என்ற அடுக்குமாடி குடியிருப்பும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை  11 மணிக்கு கொச்சி மராடு பகுதியில் ஜெயின் கோரல் குடியிருப்புகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இந்நிலையில் இதற்கு அடுத்து நான்காவதாக கோல்டன் காயலோரம் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
 இதில் மேலும் படிக்கவும் :