வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 23 மே 2015 (16:17 IST)

ஹைத்ராபாத்தில் வெயில் மற்றும் அனல் காற்றுக்கு 429 பேர் பலி

ஹைத்ராபாத்தில் வெயில் மற்றும் அனல் காற்றுக்கு 429 பேர் பலியாகியுள்ளனர்.
 
ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருகின்றது.
 
வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், அங்கு வசிப்பவர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர். அலுவலகம் செல்வோர், தினசரி கூலித் தொழிலாளர்கள் நிலைதான் மிகவும் பரிதாபமாக உள்ளது.
 
ஹைதராபாத்தில் காலை 9 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்கி, மாலை 4 மணிவரை , வெயில் வாட்டிவைத்த வண்ணம் உள்ளது. மாலையில் சூரியன் மறைந்த பின்பும் கூட அனல் காற்று வீசுகிறது.
 
ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களிலும், பரவலாக வெயில் 110 டிகிரியை தாண்டியுள்ளதாக வானிலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கடும் வெயில் மற்றும் அனல் காற்றை தாங்க முடியாமல் குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என பலரும் பரிதவித்து வருகின்றனர். கடும் வெயில் மற்றும் அனல் காற்றுக்கு இதுவரை சுமார் 429 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இதை தடுக்க தேவையான நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வரும் ஆந்திர அரசு, இந்த விவகாரத்தை மிகுந்த கவைலையுடன் கையாண்டு வருகின்றது.