வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 5 நவம்பர் 2015 (18:07 IST)

40 பழங்குடி பெண்கள் பாதுகாப்பு படையினரால் பாலியல் பலாத்காரம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 40 பழங்குடி பெண்களை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்ததாக காவலர்கள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் ‍செய்யப்பட்டுள்ளது.
 

 
சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில், மாவோயிஸ்ட்டுகளை பிடிப்பதாக கூறி செல்லும் பாதுகாப்பு படையை சேர்ந்த காவரலர்கள் பழங்குடி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்கள்.
 
கடந்த அக்டோபர் 19ஆம் தேதி முதல் 24ஆம்தேதி வரை அங்குள்ள பெடாபள்ளி, சின்னகலூர், பெடாகளுர், குண்டம் ஆகிய கிராமங்களில் 40 பெண்கள் காவலர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த பொருட்களை திருடிக் கொண்டு, குடிசைகளை அழித்து விட்டும் காவலர்கள் சென்று விட்டனர்.
 
இது பற்றி தகவல் அறிந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் உண்மை கண்டறியும் குழுவினர் காட்டுக்குள் சென்று பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அந்த 40 பெண்களையும் அழைத்து வந்து பிஜப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க செய்தனர்.
 
இதையடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இது பற்றி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காவலர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.