Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பள்ளியிலேயே பலாத்காரம் செய்யப்பட்ட எல்கேஜி சிறுமி: காமுகனுக்கு ஆயுள் தண்டனை!

பள்ளியிலேயே பலாத்காரம் செய்யப்பட்ட எல்கேஜி சிறுமி: காமுகனுக்கு ஆயுள் தண்டனை!


Caston| Last Modified வெள்ளி, 16 ஜூன் 2017 (16:34 IST)
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எல்கேஜி படித்துவந்த 4 வயது சிறுமியை அந்த பள்ளியை சேர்ந்த அலுவலர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

 
 
கடந்த 2014-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்கேஜி படித்து வந்த சிறுமியை அந்த பள்ளியை சேர்ந்த அலுவலர் ஒருவர் கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
அதன் பின்னர் சிறுமி வீட்டிற்கு சென்றபோது வயிற்றில் வலி ஏற்படவே பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளனதை அங்கு மருத்துவர் கண்டறிந்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
 
இதனையடுத்து அந்த பள்ளிக்குள் புகுந்த பொதுமக்கள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி தீ வைத்தனர். மேலும் சிறுமி அளித்த அடையாளங்களை வைத்து 2014 டிசம்பர் 16-ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இதனையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது அந்த வழக்கில் குற்றவாளிக்கு போஸ்கோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :