பீகாரில் பயங்கரம்: லாரி மோதி 4 போலீஸார் பலி


Abimukatheesh| Last Updated: திங்கள், 11 செப்டம்பர் 2017 (16:42 IST)
பீகார் மாநிலம் முஸாபார்பூர் அருகே பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் மீது லாரி மோதியதில் 4 போலீஸார் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

 

 
பீகார் மாநிலம் முஸாபார்பூர் மாவட்டம் பணாபுர் காவல் நிலைத்தைச் சேர்ந்த போலீஸார் இன்று காலை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த பகுதியில் வேகமாக வந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் அங்கிருந்த 4 போலீஸார் மற்றும் 1 நபர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
 
இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இருவர் மட்டும் உயிர்பிழைத்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :