செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 20 செப்டம்பர் 2014 (17:50 IST)

இந்திய எல்லைக்குள் சீனப்படை மீண்டும் ஊடுருவல்: லடாக்கில் முகாமிட்டுள்ளத்தால் பதற்றம்

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை தொடர்ந்து லடாக் பகுதியில் இருந்து வெளியேறிய சீனப் படையினர் ஒரே நாளில் மீண்டும் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதால் பதற்றம் நிலவுகிறது.
 
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள ஷ்மர் என்ற இடத்தில சீனப் படையினர் ஊடுருவியதை அடுத்து அங்கு இந்திய பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர்.
 
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை அடுத்து எவ்வித அறிவிப்பும் இன்றி சீனப்படை வெளியேறியது. இதனையடுத்து இந்திய ராணுவ வீரர்களும் அங்கிருந்து திரும்பினர்.
 
இந்நிலையில் சீனப் படையை சேர்ந்த 35 பேர் திரும்பி வந்து ஷ்மரில் உள்ள மலையில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த இடம் சீனாவுக்கு சொந்தம் என்று அவர்கள் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சீனப் படையைச் சேர்ந்த 300 பேர் எல்லைக்கோடு அருகே முகாமிட்டு இருப்பதால் லடாக்கில் பதற்றம் நிலவுகிறது. எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையின் போது உறுதி அளிக்கப்பட இரண்டே நாளில் சீனப்படை அத்துமீறி ஊடுருவியிருப்பது குறிப்பிடத்தக்கது.