வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 26 நவம்பர் 2014 (01:08 IST)

இந்த ஆண்டில் 300 விவசாயிகள் தற்கொலை

இந்த ஆண்டில் மட்டும் இது வரை 300க்கும் அதிகமான விவாசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



விவசாய சமூகத்தினருக்கு ஏற்படும் துன்பங்கள் காரணாமாக, 2014 ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையை மத்திய விவசாயத்துறைக்கான இணையமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யான் வெளியிட்டுள்ளார்.
 
முதலிடம்
 
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக ஏப்ரல் மாதம் வரை 204 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தெலுங்கான மாநிலத்தில் 69 விவசாயிகளும், கர்நாடக மாநிலத்தில் 19 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அதைப்போல் குஜராத், கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்கள் அளித்துள்ள தகவலின்படி அம்மாநிலங்களில் தலா மூன்று விவசாயிகள் மாண்டுள்ளார்கள்.
 
விவசாயம் மற்றும் விவசாய கடன் தொடர்பான விடயங்கள் மாநில அரசுகள் தொடர்புடையது என்பதால், அந்தந்த மாநில அரசாங்கங்களே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மத்திய விவசாயத்துறைக்கான இணையமைச்சர் சஞ்சீவ் குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் இழப்பீடுகளையும் மாநில அரசுகள் வழங்குவதாகவும், அதற்காக மாநில அரசுகளுக்கு தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
மத்திய அரசின் தற்போதைய வரவு செலவு திட்டத்தில், விவசாயத்துறையின் மேம்பாட்டிற்கான திட்டத் தேவைக்காக என ரூபாய் 22,309 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.