வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 29 நவம்பர் 2015 (16:01 IST)

விருது வழங்கும் விழாவை புறக்கணிக்க 3 எழுத்தாளர்கள் முடிவு

எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழாவை புறக்கணிக்க 3 கன்னட எழுத்தாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
 

 
இந்தியா முழுவதும் சமீபகாலத்தில் எழுத்தாளர்கள் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் அவர்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதற்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் எழுத்தாளர்கள் தங்கள் பதக்கங்கள், விருதுகளை திருப்பிக் கொடுத்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் அடுத்த வாரம் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் இலக்கிய விழா ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
 
எழுத்தாளர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கண்டித்து இந்த விழாவை புறக்கணிக்கப் போவதாக ஓஎல் நாகபூஷண சுவாமி, பேராசிரியர் ஆரிப் ரசா, தயானந்தா ஆகிய 3 கன்னட எழுத்தாளர்கள் அறிவித்து உள்ளனர்.
 
இது பற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்து வரும் விக்ரம் சம்பத்துக்கு அவர்கள் கடிதம் எழுதி உள்ளனர். அதில் அவர்கள், எழுத்தாளர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அவர்களை விழாவுக்கு வருமாறு அழைப்பது வருத்தமாக உள்ளது.
 
விழா பற்றிய அறிவிப்பும் முறையாக இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை. இந்த காரணங்களால் விழாவை புறக்கணிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.