செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (00:31 IST)

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 3 நிர்வாகிகள் கடத்தல்

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மூன்று பேரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்ற சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
  
 
ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில், பாக்சைட் தாது சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்திற்கு உடனே தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு மாவோயிஸ்டுகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்த கோரிக்கையை அரசு கண்டு கொள்ளவில்லை.
 
இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் மம்தி பாலையா படால், மெற்றொரு தலைவர் வந்தாலம் பாலையா, மற்றும் மாவட்ட பிரதிநிதி முக்காலா மகேஷ் ஆகிய 3 பேரை பேச்சுவார்த்தை நடத்த மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்தனர். அதை ஏற்று அவர்கள் கொத்தாகுடா பகுதிக்கு சென்ற போது திடீர் என அவர்களை மாவோஸ்ட்டுகள் அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்குள் கடத்திச் சென்றனர். 
 
இந்த தகவல் அறிந்த விசாகப்பட்டினம் எஸ்.பி பிரவீன் அவர்களை மீட்டுகும் பணியில் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.