வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 5 மார்ச் 2015 (16:21 IST)

அரசுப் பள்ளியில் 25 ஆசிரியர்கள், 80 மாணவர்கள் ஒரே நேரத்தில் மாயம்

அரசுப் பள்ளி ஒன்றில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பள்ளி ஆசிரியர்கள் 25 பேர் உட்பட யாருமே இல்லாமல் இருந்துள்ளனர்.
 
மாகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் அருகில் இருக்கும் மனவளம் குன்றியவர்கள் பயிலும் பள்ளியில் நேற்று 04-03-2015 (புதன்கிழமை) சமூக நீதித்துறை அமைச்சர் ராஜ்குமார் பாடோல் சென்றபோது அங்கு எவருமே இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
 

 
இது குறித்து விசாரணை நடத்தியபோது அங்கு 80 மாணவர்களும், 25 ஆசிரியர்களும் இருப்பதாக ஆவணங்கள் உள்ளதை கண்டுள்ளார். இதனால் அருகில் இருந்த மாணவர் விடுதியில் சென்று விசாரித்துள்ளனர்.
 
அதற்கு அவர்கள், "ஒருவேளை எல்லோரும் விடுப்பில் சென்று இருக்கலாம்" என்று பதிலளித்துள்ளனர். ஆசிரியர்கள், மாணவர்கள் என எல்லோரும் ஒரே நேரத்திலா விடுமுறையில் செல்வார்கள்? என அமைச்சர் கன்ஃபியூஷ் ஆகி வெளியேறியுள்ளார்.
 
இதனால் இனிமேல் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தப்போவதாகவும் அமைச்சர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.