வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 24 மார்ச் 2017 (19:19 IST)

உலகின் 25% நோயாளிகள் இந்தியாவில்......அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகில் உள்ள 25% காச நோயாளிகள் இந்தியாவில் உள்ளதாக ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.



 

 
காசநோய்(TB) மற்றும் நுரையீரல் பாதிப்புகளுக்கான ஆய்வை நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் மையம் நடத்திய இந்த ஆய்வில், இந்தியாவின் காசநோயாளிகள் மட்டுமின்றி அண்டை நாடுகளில் காசநோயின் தாக்கம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. 
 
அந்த ஆய்வில்,
 
இந்தியாவில் நகரப் பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் 12 பேர் விதம், கிராமப்புறத்தில் வருடத்திற்கு 4 பேர் விதம் என காசநோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 4,80,000 இந்தியர்கள் காசநோய் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். உலகில் 25% காசநோய் பாதிப்படைந்தவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இன்று உலக காசநோய் தினம் கடைப்பிடிக்கப்படும் வேளையில் இந்த ஆய்வு அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.