Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்

poor people
Last Modified வியாழன், 1 பிப்ரவரி 2018 (12:26 IST)
நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
மத்திய அரசின் சார்பாக 2018ம் ஆண்டின் ரயில்வே மற்றும் பொருளாதார  பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தற்போது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
 
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர்   அருண் ஜேட்லி இன்று காலை 11 மணிக்கு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
 
அப்போது உரையாற்றி அவர் உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் உருவாகும். சராசரியாக 3 ஆண்டுகளில் 7.5% வளர்ச்சியை  எட்டியுள்ளோம் என தெரிவித்தார். மேலும் புதிய இலவச மருத்துவ வசதி திட்டத்திற்காக சுகாதாரத்துறைக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 50 கோடி பேர் பயன்பெறுவர். ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச சிகிச்சை பெறுவார்கள். தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் மூலம் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
 
காசநோயாளிகளுக்கு மாதம் ரூ.500 சிகிச்சைக்காக வழங்க ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். நாடு முழுவதும் 24 மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளாக மாற்றப்படும் என அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :